துளசிதாசர்

திரேதாயுகத்தில் வால்மீகி ராமாயணம் எழுதிய ராம பக்தர், இக்கலியுகத்தில், ஹரியின் மகிமைகளை பாட்டுக்களாக எழுதி, பாடி மக்களிடையே பக்தியைப் பரப்புவது ஸ்ரீஹரியின் விருப்பப்படி ஹஸ்தினாபுரம் என்னும் ஊரில், கநூஜ்,  ஓர் அந்தணர் வீட்டில் மறுபடி பிறந்தார். அவரது தந்தை, ஆத்மாராம், ஓர் வேதவித்து. அவர், அக்பரின் அரண்மனையில் இருந்தார். அவர், தம் குழந்தைக்கு சாஸ்திரப்படி கிரியை செய்து, துளசிதாஸ் எனப் பெயரிட்டார். பின், வேதமுறைப்படி, துளசிதாசருக்கு உபநயனம் செய்து வேதங்களை கற்பித்தார். துளசிதாசரும் 12  வருடங்கள் பிரமச்சரிய விரதம் மேற்கொண்டு, வேதங்களை நன்கு படித்தார். மற்றும், ஸ்ரீகிருஷ்ண பக்தி நிறைந்தவராகவும் விளங்கினார்.

காலக்ரமத்தில், ஆத்மாரம் தன் புதல்வருக்கும், அழகும், பண்பும் நிறைந்த மமதா என்னும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வித்தார்.  இருவரும், மனம் ஒத்த தம்பதிகளாய் இருந்தனர்.

ஒருநாள், அக்பர் துளசிதாசரை அழைத்துக்கொண்டு யாத்திரைக்கு புறப்பட்டார். அவர் சென்றபின், மம்தாவின் தாயார் வீட்டிலிருந்து வந்த ஒருவர், மம்தாவின் தாயாருக்கு உடல்நலம் இல்லை என்றும், உடனே, மமதாவை பார்க்க வேண்டும் என்று விரும்புவதாக செய்தி சொன்னார். கணவர் ஊரில் இல்லாத நேரத்தில் அவரிடம் சொல்லாமல் போகத் தயங்கினாள். பின், துளசிதாசரின் பெற்றோரின் அனுமதி பெற்று தாய் வீடு சென்றாள். யாத்திரை சென்று வீடு திரும்பிய துளசிதாஸ், தன் மனைவியைக் காணாது, பெற்றோரின் மூலம் விவரம் அறிந்து உடனே தன் மனைவியைக் காணப் புறப்பட்டார். கொட்டும் மழையையும், யமுனா நதியின் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் 10km நடந்து, தம் மனைவியின் வீடு சேர்ந்தார். இரவு நேரம் ஆகி விட்டதால், அவரது வீட்டுக் கதவுகள் பூட்டி இருந்தன. காவலர்களும் உறங்கிவிட்டனர். வழி தெரியாமல் நின்ற துளசிதாசருக்கு, மேல்தளம் இருந்து ஓர் கயிறு தொங்குவதுப்போல் தெரியே, அவர், அதைப் பற்றிக்கொண்டு மேல்தளம் சென்றடைந்து மனைவியின் அருகில் சென்று நின்றார். திடுக்கிட்டு எழுந்த அவர் மனைவி திகிலுடன் தன் கணவரை நோக்கி, 'எவ்வாறு இந்த நேரம் இங்கு வந்தீர்கள்?' என்று கேட்க, துளசிதாசர், 'எனக்காக, நீ மேலே இருந்து போட்ட கயிற்றின் மூலம் ஏறி வந்தேன்.' என்றார். மேலும், அதிர்ச்சி அடைந்த மம்தா, ஒன்றும் புரியாதவளாக, அந்தக் கயிறு எங்கே என்று காட்டுமாறு கூறினாள். அவள், தன் கணவருடனும், மற்ற வேலை ஆட்களை அழைத்துக் கொண்டு தீபம் ஏற்றிக் கொண்டு கயிறு இருக்கும் இடம் பார்க்கக் சென்றார். துளசிதாசர் காட்டிய கயிற்றைக் கண்ட மம்தா திடுக்கிட்டார். அது கயிறல்ல, ஓர் நீளமான கொடிய விஷப் பாம்பு தொங்கிக் கொண்டிருந்தது. எல்லோரும் பயத்தினால் நடுங்கி ஸ்தம்பித்து நின்றனர்.

மிகுந்த வேதனையுடன் மமதா தன் கணவனை நோக்கி 'பிரபு நீங்கள் இந்த நள்ளிரவு வேளையில் தாய், தந்தையாரைப் பற்றி கவலைப்படாது, உங்கள் நலம் பற்றியும் என்னாது என்மேல் இருக்கும் அன்பினால் வந்துள்ளீர்கள். இந்த கொடிய பாம்பு உங்களைத் தீண்டீ இருந்தால் என்னாவது? பெண்ணாசை மிகவும் கொடியதும், வேதனைப் படுத்துவதும் ஆகும். ராவணனும், இந்திரனும் கேட்டது பெண் ஆசையினால்தான். உலக ஆசைகளில் மனதை செலுத்தாமல், ஸ்ரீராமநாமத்தில் லயித்து, கானம் செய்து அவன் புகழ்பாடுவதன்றோ உத்தமம் என்று பலவாறு கூறியதைக் கேட்டு துளசிதாசருக்கு தன் பிறப்பின் காரணம் புரிந்தது. அந்தக் கணமே அவர் மனைவியை விட்டு விட்டு, கானகம் நோக்கி ராம ஸ்மரனையுடன் நடக்கலானார். இவ்வாறாக நடந்து, நடந்து காசி வந்தடைந்தார். பாகிரதி நதியில் நீராடி, உதிர்ந்த இலைகளை மட்டும் உணவாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். இவ்வாறாக ஒவ்வொரு நதிகளிலும் நீராடி தன் கமண்டலத்தில் எஞ்சி உள்ள நீரை வழியில் உள்ள செடிகளுக்கு ஊற்றி ராம கானம் செய்துக் கொண்டு 12 வருடங்கள் கழித்தார். 

ஒரு நாள், துளசிதாசர், ஓர் ஓடையில் நீராடிவிட்டு தன் கமண்டல நீரை ஓர் மரத்தின் வேரில் ஊற்ற, திடீரென அம்மரம் பிளந்து ஒரு ராட்ஷசன் அவர் முன் நின்று இரு கைகளையும் கூப்பியபடி வணங்கி நின்றான். மேலும், அவரை நோக்கி, "சுவாமி, நான் மிக்க மகிழ்வடைதுள்ளேன், ஏனெனில், எங்களைப் போன்ற மரங்கள் வேர் எந்த நீர் நிலைகளிலும் தண்ணீர் அருந்தக்கூடாது என்பது சாபம். நான் மிகவும் தாகமாக இருந்த வேலையில், தாங்கள் ஊற்றிய இந்த நீர் ஏன் தாகத்தை தீர்த்து. ஆகையால் தங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள்" என்றது. ஆச்சரியம் அடைந்த துளசிதாசர், "அப்பா, நான் ஸ்ரீராமனின் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருகிறேன், எனக்கு வேறொன்றும் தேவையில்லை" என்றார். இதைக் கேட்ட அந்த பிரம்மா ராட்சஷன், "சுவாமி, நான் அந்தப் பெயரை சொன்னால் பஸ்மம் ஆகி விடுவேன். ஆதலால், தாங்கள் ஹனுமனை பிரத்தனை செய்தால் அவர் மூலம் இறை தரிசனம் கிட்டும். எங்கெல்லாம் புராணங்கள் பாடப்படுமோ அங்கல்லாம் ஹனுமான் கண்டிப்பாக வருவார். அவர் அந்த இடத்திற்கு எல்லோருக்கும் முன்பாக வந்து, எல்லோரும் சென்றபின் அவ்விடம் விட்டுச் செல்வார். வயதான அவர் பழைய துணி அணிந்திருப்பார். தலையில் குள்ள இருக்கும்." என அடையாளங்களைச் சொல்லி அந்த பிரம்மா ராட்சசன் மறைந்தான.

மறுநாள் துளசிதாஸ் நீராடி,உபன்யாசம் செய்யும் இடம் தேடி சென்று அமர்ந்தார். அவ்வேளையில் ஓர் வயதான உருவம் ராட்சஷன் சொன்ன அடையாளங்களுடன் வந்து அமர்ந்தது. அதைக் கண்டதும் துளசிதாசரும், இவர்தான் மாருதி என அடையாளம் கண்டு கொண்டார். உபன்யாசம் முடிந்தபின், எல்லோரும் சென்றபின் மாருதி வேகமாக வெளியேற, துளசிதாஸ் பின் தொடர்ந்தார். நீண்ட நேரம் நடந்த பின், மாருதி நின்று, 'நீ யார், ஏன் என்னை பின் தொடர்கிறாய்?' எனக்க கேட்க்க, துளசிதாசர், மாருதியின் இரு கால்களையும் கெட்டியாகப் பற்றிக் கொண்டு, கண்ணீர் மல்க தமக்கு 'ராம தரிசனம்' காண அருள் புரிய வேண்டினார். 


தம் ஞான திருஷ்டி மூலம், துளசிதாசர் வேறு யாரும் இல்லை, சாட்சாத் வால்மீகியின் மறுபிறப்பே என தெரிந்து கொண்ட மாருதி, அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவருக்கு நிச்சயம் ராம தரிசனம் கிட்டும் என அருள் புரிந்தார். 

ஹனுமான் ராமனை பிராத்தித்து துளசிதாசருக்கு கட்சி தருமாறு வேண்டினார். ஸ்ரீ ராமனும் துளசிதாசருக்கு தரிசனம் தருவதாக சமதித்தார். 

மறுநாள் வானரப்படையுடன், ஸ்ரீ ராமர் ஓர் அரசனைப் போலே முன் செல்ல துளசிதாசரின் குடிலைக் கடந்துக் சென்றனர். அதைக் கண்ட துளசிதாசர், யாரோ முகமதிய அரசன் தன் படையுடன் செல்வதாக நினைத்து வணக்கம் செலுத்தினார். மறுநாள் ஆஞ்சநேயர், துளசிதாசரிடம் வந்து உன் விருப்பம் பூர்த்தி அடைந்ததா என்று கேட்டார். துளசிதாஸ், தன் காணவில்லை எனக் கூற, நேற்று வானரப்படையுடன் வந்தவரே ஸ்ரீ ராமன், எனக் கூறினர். ஆனால், துளசிதாசரின் மனம் திருப்தி அடையாததால், ஸ்ரீ ராமனை வில் தாங்கிய பீதாம்பரதாரியாக காண வேண்டும் என பிராத்தித்து தனக்கு மறுபடியும் ராம தரிசனத்திற்கு அருள் புரிய மன்றாடிக் கேட்டுக்கொண்டார். மனம் இறங்கிய ஹனுமான், மறுபடி ராமனைத் துதித்து, வால்மீகியின் அவதாரமான துளசிதாசருக்கு மறுபடி அவர் விருப்பப்படி அருள வேண்டினார். ஹனுமானின் வேண்டுகோளை கேட்ட ஸ்ரீ ராமன், 'அஞ்சநேய!, உன் பக்தியின் மகிமையும், உன் கருணை உள்ளமும் என்னை நெகிழச்செய்தாலும், இந்தக் கலியுகத்திற்கு ஏற்றார்போல்தான் தரிசனம் தர இயலும்.' என்றார். அதற்க்கு ஹனுமான், 'ராமா உன் ஆணைப்படி வால்மீகி துளசிதாசராக அவதரித்துள்ளார். உன் பெருமைகளைப் பரப்புவதே இந்த பிறப்பில் நீ அவருக்கிட்ட கட்டளை. ஆகவே, நீ துளசிதாசரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.' என வேண்டினார்.

ஸ்ரீ ராமனும் ஹனுமானின் கோரிக்கைப்படி துவாபரயுக ராமனாக சீதாவுடனும்,லக்ஷ்மனனுடனும் மாருதியுடன் புறப்பட்டார்.மாருதியும் முன் சென்று துளசிதாசருக்கு ஸ்ரீ ராமனின் வருகையைக் கூறினார்.    மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தனது குடிலின் முன் வந்த ஸ்ரீ சீதா ராமனை லக்ஷ்மனனுடன் கண்டுமனமகிழ்ந்து கிழ்ந்து  நமஸ்கரித்தார்.மாருதியும் துளசிதாசரின் அவதாரப் பணியை இக்கலி யில் பூர்த்தி செய்ய ஸ்ரீராமனை துளசிதாசரின் தலையில்  கை வைத்து ஆசீர்வதிக்க கோரினார். ஸ்ரீ ராமனும் துளசிதாசரை ஆசீர்வதித்து மறைந்தார். 

அதன்பின் அந்த காசி நகரில் துளசிதாசரின் ராமகானம் எல்லா திசைகளிலும் பரவி எல்லோரும் ராமபக்தியை பூரணமாக  அனுபவித்தனர். இவாறாக காசி வாசிகள் துளிசிதாசரின் பக்தர்களாகவும், சீடர்களாகவும் மாறி அவருடையத் தேவைகளை கவனித்துக் கொண்டனர். 

ஒரு நாள், ராம பஜனை நடந்து முடிந்த பின் பக்தர்கள் வீடு திரும்பினர். இரவு குடிலின் கதவுகள் திறந்தே இருக்க துளசிதாசரும் அவரது சிஷ்யர்களும் படுக்கச் சென்றனர். இதை கவனித்த இரு திருடர்கள் துளசிதாசரின் குடிலுக்குள் நுழைந்து தமக்கு வேண்டிய மட்டும் பொருட்களை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வர அங்கே அம்பும் வில்லும் ஏந்தி இரு காவலர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டு பயந்த திருடர்கள் மறுபுறம் உள்ள வாழல் வழியே வெளியேற முற்பட அங்கேயும் இது போன்றே வில்லும் அம்பும் ஏந்திய இருவர் காவல் புரிந்து கொண்டிருந்தனர். செய்வதறியாத திருடர்கள் விடியும் வரை அங்கேயே இருந்து விட்டு வெளிச்சம் வரும் முன் வெளியேறலாம் என திட்டமிட்டு காத்திருந்தனர். அவாறே விடியும் நேரம் காவலாளிகள் வீடு சென்றிருப்பார்கள் என எண்ணி, வெளியேற முயர்ச்சிக்கையில் கையில் அம்புடன் இவர்களைக் குறி வைத்து காத்திருந்தனர். மிகவும் பயந்த அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. பொருள்களையும் கீழே போடும்படி கட்டளை இட்டனர்.

விடிந்ததும் எல்லோரும் எழுந்து தங்கள் வேலைகளை கவனிக்க சென்றார்கள். அப்போது துளசிதாசரை கண்ட திருடர்கள் அவரது பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். பின் நடந்த விவரங்களையும் சொன்னார்கள். துளசிதாசர் சந்தேகமுற்று தம் சிஷ்யர்   களை அழைத்து யார் இவர்களைப் போகவிடாமல் தடுத்தது, என வினவினார். சிஷ்யர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 'நாங்கள் யாரும் அப்படி செய்யவில்லை', என்றனர். அப்போது, அந்த திருடர்கள், இவர்கள் யாரும் இல்லை, கரிய உருவமுடன் தலையில் கிரீடமும், கையில் வில்லும் அம்பும் ஏந்திய இருவரே காவல் செய்ததாக கூறினர். இதைக் கேட்டதும் துளசிதாசருக்கு உண்மை புலப்பட்டது. ஸ்ரீ ராம லக்ஷ்மரே நம் வாயில் காப்பவராக வந்துள்ளனர், என்பதி புரிந்துக் கொண்டு கண்களில் கண்ணீர் தரையாக வழிய 'ஒ ராம்!. பால் கேட்ட உபமன்யுவிற்கு பால் கடலையே கொடுத்தாயே ! கல்லாய் இருந்த அகல்யாவிற்கு மோட்சம் அளித்தாயே, விபீஷனுக்கு அவனுடைய அன்புக்கு பரிசாக தங்க நகரமான இலங்கையை அளித்தாயே. இப்போது என குடிலுக்கு காவலை இருந்து என இந்தத் திருடர்களின் ஆசைக்கு தடை செய்தாய்? கருணாமூர்த்தி, இங்கு இருப்பவை எதுவும் எனதென்று ஒன்றும் இல்லை அல்லவா? எல்லாம் உன்னுடயதுதானே? நீயின்றி என்னக்கு வேறு எது சொத்து. ராகவ, உன் அன்பிற்கும் கருணைக்கும் எல்லையே இல்லை', என பலவாறு துதித்தார். சுற்றி இருந்த எல்லோருக்கும் அவரது பக்தியும் ராமனின் பெருமைகளும் புரிந்தன. முக்கியமாக இந்த இரு திருடர்களும் மனம் மாறினார். துளசிதாஸ் அவர்களிடம் வேண்டிய அளவு செல்வங்களை எடுத்துச் செல்ல அனுமதித்தும் அவர்கள் அவரது ஆசிகலையே வேண்டினார்கள். தங்களது அறியாமைஐயும், பாவங்களையும் மன்னித்து அருளுமாறு கூறி, அவரது மகிமையால் தமக்கு ஸ்ரீ ராமலக்ஷ்மண தரிசனம் கிடைத்ததே பெரும் செல்வமாக கருதுவதாக கூறி, தங்களையும் அங்கேயே தங்க அனுமதிக்குமாறு வேண்டினார்கள். துளசிடசரும் மிக்க மகிழ்வுடன் ராமபக்தர்கலாக ஏற்றுக்கொண்டார்.

ஒருநாள் ஆஷ்ரமத்தில் எல்லோரும் உணவு அருந்த உட்கார வாசலில் ராம் ஜெய்சீதாராம் என்ற குரல் கேட்டது. வாசலுக்கு வந்த துளசிதாசரிடம் வாசலில் இருப்பவர் தான் ஒரு பிராமணனைக் கொன்ற கொலையாளி என்றும் தமக்கு உணவு தருமாறு கேட்டார். உடனே துளசிதாசர் அவரை மரியாதையுடன் அழைத்து வந்து தம் அருகில் அமரச் செய்தார். இது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை.

சிஷியர்கள், தங்கள் எல்லோருக்கும் சமமாக ஒரு கொலையாளியை எவ்வாறு  அமரச் செய்தார் என வினவ, தாசரும் அவர் எபோது ராம்-சீதா என சொன்னாரோ அப்போதே அவர் பாவங்களை எல்லாம் நெருப்பில் இட்ட தூசிபோல் ஆகிவிட்டது. அதனாலேயே அவர் இங்கு உட்கார அருகதை உள்ளவராக எனக் கூறி சமாதனப் படுத்தினர். ஆனால் மற்றவருக்கு இந்த பதில் திருப்தியாக இல்லாததால் தாசரிடம் ஒரு கல்லான எருதுக்கு இந்த ராம் பிரசாதத்தை தங்கள் கொடுத்து உண்ணச் செய்தால் அவரது இந்தச் செயலை தங்கள் ஒப்புக் கொள்வதாகக் கூறினார்கள். உடனே தாசர் அருகில் உள்ள ஸ்ரீ விஸ்வேஸ்வரர் ஆலயத்திற்கு ஒரு தட்டின் நிறைய உணவை எடுத்துக் கொண்டு கிளம்ப எல்லா பிராமணர்களும் அவரை பின் தொடர்தனர். 

கோவினுள் சென்ற துளசிதாசரும் ஸ்ரீ விஸ்வேஸ்வரை பலவாறு துதித்து சிவனின் முன் நின்ற கல் நந்தியிடம் உணவை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ட, கல் நந்தியும் பெருமூச்சு விட்டு எழுந்து வந்து இலையோடு அந்த உணவை உன்றுவிட்டு மறுபடியும் கல் நந்தியாக மாறிவிட்டது. இந்த ஆச்சர்யத்தைக் கண்ட எல்லோரும் ஈசன் புகழ் பாடி வணங்கி துளசிதாசருக்கு வணக்கம் செலுத்தி தமது செயலுக்கு மன்னிப்பு கேட்டனர். பக்தியின் முன் சாஸ்திரமோ வேதமோ பிற்பட்டது என்பது துளசிதாசரின் இச்செயலால் எல்லோரும் உணர்தனர்.

சில தினங்கள் சென்றன. அந்த ஊரில் ஜெயித்பால் என்ற வணிகன் இறந்துவிட்டான். துக்கம் தாளாத அவனது மனைவியும் அவனுடன் உடன் கல்லாய் ஏற தீர்மானித்தால். ஊருக்கு வெளியே தீ மூட்ட ஏற்பாடாகியது. அவனது மனைவி, அவனுக்கு பிரியமான வஸ்துக்களுடன், தானும் அவனுக்கு பிரியமானவள்  ஆகையால் இந்த முடிவு செய்தல். போகும் வழியில் துளசிதாசரின் குடிலைக் கண்ட அவள், உள்ளே சென்று துளசிதாசரை வணங்கினாள். ராம ஸ்மரனையுடன் இருந்த தாசர் '8 குழந்தைகள்ளுக்கு தாய் ஆவாய்', என்று ஆசீர்வாதித்தார். வேதனையுடன் திடுக்கிட்ட அவள் அழுகையோடு தன் நிலையை அவரிடம் கூறினாள். அதைக் கேட்டு துளசிதாசர், 'அம்மா, இது ஸ்ரீராமனின் வாகாக நான் நினைக்கிறேன். நானாக கூறவில்லை. ஆகையால் ஸ்ரீராமனின் வாக்கு பொய்க்காது.' என்றார். அந்தப் பெண் மறுபடியும் அவரை நமஸ்கரித்து விட்டு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டாள்.  அங்கு அவள் அடைந்ததும் அவள் கண்ட காட்சி, மகனின் வார்த்தைகள் உண்மை நிதர்சனமாகி உள்ளதை அறிந்தாள். அவள் கணவன் உறக்கத்தில் இருந்து எழுந்தது போல் எழுந்திருந்தான். இன்ப அதிர்ச்சியுடன் அவள் தான் கணவனிடம் நடந்ததைக் கூற, இருவரும் ஆஷ்ரமம் நோக்கிச் சென்று மறுபடி துளசிதாசருக்கு தங்கள் வணக்கத்தை தெரிவித்தனர். தாசரும் அவர்களுக்கு ராம நாமத்தின் மகிமைகளைச் சொல்லி ராம கானம் ஜபம் செயுமாருச் சொல்லி ஆசீர்வதித்தார். 

தில்லியின் அரசராக இருந்த அக்பருக்கு துளசிதாசருடைய இந்த மகிமைகள் தெரிய அவர் உடனே தாசரை தன் அரண்மனைக்கு அழைத்துவர கட்டளை இட்டார். மேலும் அவரை சோதிக்கவும் நினைத்தார். அதன்படி, சகல மரியாதைகளுடன் தாசரை மந்திரி பிரதானிகள் அழைத்து வந்தனர். அவர் வந்ததும் அக்பர் அவரை வரவேற்று சிம்மாசனத்தில் அமரச் செய்து தனக்கு ஸ்ரீ ராம தரிசனம் கிட்ட அருள வேண்டும் என்று வேண்டினார். மேலும் தாசர் அதுவரை இங்கேயே தங்க வேண்டும் என்று கட்டளை இட்டார்.

அரசனின் கட்டளைக் கேட்டு தாசர் செய்வதறியாது மாருதியை தியானம் செய்தார். மாருதியும் அவர் முன் தோன்றி விஷயம் அறிந்தார். உடனே தாசரை வேடனை பட வேண்டாம் என அறுதல் கூறி, ஸ்ரீ ராமனின் பெயரை ஜபிக்க 1000 கணக்கில் குரங்குகள் அரண்மனை உள்ளும் வெளியும் நடமாடத் தொடங்கின. அவைகள் எல்லாவற்றையும் நாசம் செய்தன. ராணிகளின் அறைக்குள்ளும் நுழைந்தன, அவர்களையும் துன்புறுத்தின. இதனால் பயந்த ராணிகள், மன்னனிடம் முறையிட செய்வதறியாது திகைத்தான் அரசன். அப்போது அவர் மந்திகளில் ஒருவர், தாசரின் ராம பக்தியால் இவைகள் நிகழ்வதாகவும் தாங்கள் தாசரிடம் மன்னிப்பு கேட்டு அவரை விடுவிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். அதன்படி அரசன் உடனே துளசிடாசரிடம் சென்று தன்னை மன்னித்தருளுமாறு வேண்ட, தாசரும் மாருதியிடம் விண்ணப்பிக்க உடனே எல்லாக் குரங்குகளும் மறைந்தன. அப்போது தாசர் அக்பரிடம், 'சூரியன் வரும் முன் அதன் கிரணங்கள் பூமியை தொடுவதுப் போலே பல்லாயிர வானரப் படைகள் ராமனுக்கு முன் இங்கு வந்தன. இன்னும் பல்லாயிரம் வானரங்கள் வந்தபின் உனக்கு ராம தரிசனம் கிட்டி இருக்குமே' என்று சொல்ல, அதிர்சியுடன் அக்பர் 'இந்த 1000 கணக்கான வணரன்களே இவ்வளவு அட்டகாசம் செய்து விட்டனவே. இன்னும் பல்லாயிரம் வந்தால் இந்த நகரமே அழிந்து விடுமே' என்று பதட்டத்துடன் 'ராம தரிசனம் போதும் ராம கானத்தின் மகிமையை புரிந்துக் கொண்டேன்.' என்று கூறி தன் அகந்தை அழிந்ததாதாகவும் மேலும் தன்னை மன்னித்துவிடும்படி கூறினார். மேலும் ஒரு வருட காலம் தன் அரண்மனையிலேயே தங்க வைத்து ஸ்ரீராம கானம் செய்து மக்களிடையே ராம பக்தியை பரப்புமாறு வேண்டிக் கொண்டார். அவ்வாறே துளசிதாசர் அக்பரின் அன்புக்கட்டளைக்கு இணங்கி சிறிது காலம் அரண்மனையில் இருந்து கொண்டு மக்களிடையே ராம பக்தியை பரப்பினார்.


பின், துளசிதாசர் அங்கிருது புறப்பட்டு மதுரா நகரம் சென்று யமுனா நதியில் நீராடி பின் கோகுலம் பிருந்தாவனம் முதலிய இடங்கள் சென்று வழிப்பாட்டு, ஒரு மாத காலம் அங்கு தங்கி ஸ்ரீ ஹரியை தரிசனம் செய்துக் கொண்டு மேலும் மற்ற வைஷ்ணவர்களுடன் உரையாடி ஸ்ரீஹரியின் பெருமைகளை பகிரிந்துக் கொண்டார். அங்கு வசித்து வந்த ப்ரியதாஸ் என்ற பக்தர் நான்கு யுகத்திலும் வாழ்ந்த, மேலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹரி பக்தர்களைப் பற்றி ஓர் புத்தகம் எழுதி உள்ளதை அறிந்து அவரிடம் துளசிதாசர் வந்தார். அவரது மகிமையை கூறி அவரது பக்தி தொண்டின் அடையாளமான அப்புத்தகம் தனக்கு வேண்டும் என்று ப்ரியதாசரிடம் விண்ணப்பித்தார். அவற்றைப் பற்றி கூறிக் கொண்டு வந்த ப்ரியதாசர், தான் இன்னும் சிறந்த பக்தரான துளசிதாசரைப் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுதவில்லை என மனக் குறையுடன் கூறினார். அபோது ஓர் அதிசயம் நடந்தது. ஸ்ரீ ராமர் அவர்கள் முன் தோன்றி ஸ்ரீ துளசிதாசரின் மகிமைகளை தன் கைப்பட எழுதி மறைந்தார். இந்த அதிசயத்தை மற்ற பக்தர்களும் கண்டு ஆனந்தம் அடைந்தனர். பக்த வட்சலனான ஸ்ரீஹரியின் பெருமைகளை மக்கள் நான்கு அறிந்து வழிப்பட்டனர்.

ஜெய் ஸ்ரீ துளசிதாஸ்.



                       
   


ஜெயதேவர்

ஸ்ரீஹரியின் விருப்பப்படி வியாச முனிவர் ஒரு பிராமண குடும்பத்தில் துந்துபில்வா என்னும் ஊரில் ஜெயதேவராக அவதரித்தார். சகல புராண இதிகாசங்களையும் கற்றறிந்த அவர், கடவுளின் புகழ் பாடுவதே இந்த கலியுகத்தில் சிறந்த வழி என தெரிந்து கொண்டார். அவர் காலத்தில், கிருஷ்ண நாம ஜபம் பிரசித்தியாக இருந்தபோதிலும், இவர் கிருஷ்ண லீலைகளை பாடலாக கீதகோவிந்தம் என்ற பெயரில் எழுதினர். இவை பத்மபுரானத்தின் படியான கருத்துக்கள்ளாகும்.

இதில் ராதா-மாதவ பிரேமையையும், கோகுலத்தில் கிருஷ்ணனின் லீலைகளைப்  பற்றியும் பாடியுள்ளார். இதை பல பண்டிதர்களும், மக்களும் விரும்பிப் பாடலாயினர்.

இந்நிலையில் அதே ஜகன்னாத புரியின் அரசரும் ஸ்ரீகிருஷ்ணனை பற்றிய பாடல்களை புத்தகமாக எழுதி, அதையே மக்கள் ஏற்க வேண்டும் என கட்டாய படுத்தினார். ஆனால், மக்கள் அதை விரும்பாததால் இருவரின் புத்தகங்களையும் ஸ்ரீ ஜகன்னாதர் ஆலயத்தில்வைத்து  பூட்டி சிறந்ததை ஸ்ரீ கிருஷ்ணரே  தீர்ப்பு  செய்யட்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு அன்று  இரவு  அவ்வாறே  செய்தனர்.

மறுநாள் காலை சந்நிதானம் திறந்து  பார்க்கையில் ஸ்ரீ ஜெயதேவரின் பாடல்கள்  மட்டுமே  அங்கு  இருந்தது. அரசரின்  புத்தகம் வெளியே கிடந்தது  இதனால் தலைகுனிவு கொண்ட அரசன் ஸ்ரீ ஜகன்னதரிடம் பலவிதத்திலும்  மன்னிப்பு கேட்டு, தன்னை ஏற்குமாறு வேண்டினார். அவருக்கு தான் ஓயிருடன் இருப்பதுவே  கேவலமாக நினைத்தார்.  

ஜெயதேவரின் திருமணம் 
ஜகன்னாதபுரியில் ஆசாரமான குடும்பத்தை சேர்ந்த ஓர் பிராம்மணனுக்கு பத்மாவதி என்ற ஓர் பெண், அழகும், அறிவும் நிறைந்தவளாக இருந்தாள். அவளை மணக்க பல பேர் முயற்சித்தும் அந்த பிராமணன் தன் மகளை மணக்க தகுந்தவன் ஸ்ரீ கிருஷ்ணனே என்ற முடிவில் திடமாக இருந்தார். பத்மாவதியும், ஸ்ரீ கிருஷ்ண பக்தையாகவே இருந்தாள்.

ஒரு நாள், அந்த பிராமணனின் கனவில், ஸ்ரீ ஜெகநாதர் தோன்றி, தான் அவதாரத்தின் ஓர் அம்சமான ஜெயதேவருக்கு, பத்மாவதியை மணமுடிக்குமாறு  சொல்லி மறைந்தார். விழித்தெழுந்த அந்த பிராமணரும் இதை சாட்சாத் ஸ்ரீ ஜெகநாதரின் கட்டளையாகக் கொண்டு ஜெயதேவர்-பத்மாவதி திருமணத்தை 4 நாட்கள் விமரிசையாக நடத்தி முடித்தார். 

அவ்வூரில், நற்குணங்களும், பக்தியும் பொருந்திய ஒரு வியாபாரியும் இருந்தார். அவர் ஜெயதேவரிடம் அன்பும் பக்தியும் கொண்டிருந்ததால், ஜெயதேவர் அவரை தம் சிஷ்யனாக்கி கொண்டார்.  அன்பும் பண்பும் நிறைந்த அந்த வணிகர், தம் குருவிற்கு சேவை செய்வதில் மிக்க மகிழ்ச்சி உடையவராய் இருந்தார். ஒரு நாள்,  தனவானான அந்த வணிகன், ஜெயதேவர் தான் இருப்பிடம் வந்து ஸ்ரீ கிருஷ்ண லீலைகளை கானம் செய்து எல்லா மக்களும் கேட்டு இன்புறச்செய்யுமாறு வேண்டினார். ஜெயதேவரும், அவரது வேண்டுகோளை ஏற்று பக்தி இல்லாதவர்கள் கூட இந்த கிருஷ்ண கானத்தில் லயிக்கும்படி செய்தார். இவாறாக பக்தனான் வணிகனின் ஆவலை பூர்த்தி செய்து ஒரு நாள் தம் இருப்பிடம் திரும்ப வணிகனிடம் விடைபெற குரு சேவையில் திளைத்த பக்தனான அவ்வணிகன் பிரியாவிடை கொடுத்தான். மேலும், குரு பொன்னும் பொருளும் விரும்பாதவராகையால், அவருக்கு தெரியாமல் பொன்னையும், பொருளையும் ஓர் வண்டியில் ஏற்றி குருவை அவ்வண்டியில் அமர்த்தி இரு காவலாளிகளை அவரது ஊர்வரை சென்று விட்டு வரச்செய்தான். மேலும், இபொருள்களை குரு பத்தினியிடம் பணிவுடன் ஒப்படைக்கும்படி சொன்னான். அக்காவலாளிகள் இருவரும், அவ்வண்டியுடன் சிறிது தூரம் சென்ற பின் வேறு ஒருவனை குருவிற்கு காவல் செல்லுமாறு கூறிவிட்டு, அவிருவரும் தம் வீடு திரும்பினர். சிறிது நீரம் கழித்து, அந்த வேலை ஆளும் ஜெயதேவரிடம் அனுமதி பெற்று வீடு திரும்பினான். இதனால், ஜெயதேவர் தானே வண்டியை ஒட்டிச்சென்றார். இதை எல்லாம் கவனித்த  இரு திருடர்கள், ஜெயதேவரை வழிமறிக்க, அவர் அவர்களின் விருப்பம் அறிந்து வண்டியை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வீடு நோக்கி நடந்தார். சந்தேகந்துடன் ஜெயதேவரை பார்த்த திருடர்களுக்கு திடீர் என ஒரு யோசனை தோன்றியது. அதனால், மறுபடி திரும்பி வந்து, ஜெயதேவரை கொள்ள நினைத்தனர். எதோ எண்ணம் மனதில் தோன்ற, அவர்கள் ஜெயதேவருடைய கை கால்களை வெட்டி, அவரை ஒரு குழியில் தள்ளிவிட்டு சென்று விட்டனர்.

ஸ்ரீஹரி ஸ்மரனத்தில் இருந்த ஜெயதேவர் சிறிது நேரத்தில் நினைவிழந்தார். அபொழுது, அவழியே வேட்டையாட வந்தே கிரௌஞ்ச மன்னன், அம்மஹானைக் கண்டு தன் அரண்மனைக்கு எடுத்துசெல்ல உத்தரவிட்டான். அங்கு, அவருக்கு வேண்டிய வசதிகளையும், உபசாரங்களையும் செய்து கொடுத்தான். ஜெயதேவர் அவர்களின் சங்கீர்த்தனத்தில் மனம் ஒன்றிய அரசன், தானும் ஹரிபக்தனாக மாறினான். ஜெயதேவரின் உபதேசப்படி வரும் சன்னியாசிகளை  உபசரித்து அவர்கள் ஆசி பெற்று வாழ்ந்து வந்தான்.

ரௌஞ்ச மன்னன், சனியாசிகளுக்கு பொன்னும், பொருளும் தருவதை அறிந்த அந்த திருடர்கள் தாங்களும் சன்யாசி வேஷம் தரித்து அரண்மனைக்குச் சென்றனர். ஆனால், அங்கு ஜெயதேவரைக் கண்டதும் மனதில் பீதி உண்டாயிற்று. இருப்பினும், ஜெயதேவர் தன் சிம்மாசனத்திலிருந்து ஊர்ந்து வந்து அவர்களை ஆரத்தழுவி, அவர்கள்ளுக்கு வேண்டிய உபசரனைகள் செய்து, அவர்கள் போகும் வரை நான்கு கவனித்து, வேண்டிய பொருட்களை கொடுத்து அனுப்புமாறு சொன்னார். மன்னனும் அவ்வாறே செய்து மேலும் இரு காவலாளிகளை துணையாக அனுப்பிவைத்தான்.

பாதிவழி செல்கையில், காவலாளிகள்ளுக்கு சந்தேகம் எழ, அந்த போலி சன்யாசிகளை நோக்கி, "ஏன் ஜெயதேவர் தங்களிடம் இவ்வளவு கருணை காட்டினர்.?" எனக் கேட்டனர். அதற்கு அந்த போலி சன்யாசிகள், "ஜெயதேவரும் நாங்களும் ஓர் அரசரிடம் பணி புரிந்தபோது நல்லெண்ணம் இல்லாத அந்த அரசன், ஏதோ ஒரு காரணம் சொல்லி, ஜெயதேவரை காட்டிற்கு கூடிச்சென்று கொன்று விடுமாறு கட்டளை இட்டார். ஆனால், நாங்கள் கொல்ல மனமில்லாது கை கால்களை வெட்டி உயிர்ப்பிச்சை அளித்தோம்", என்று பொய் உரைத்தனர். அப்போது, எதிர்பாராத விதத்தில் பூமி பிளந்து அவ்விருவரும் அக்குழியில் விழுந்து மடிந்தனர். இதைக் கண்ட காவலர்கள் அதிர்ச்சியுடன், அரசரிடமும், ஜெயதேவரிடமும் இச்செய்தியை  சொல்ல, ஜெயதேவர் கண்ணீர் விட்டு ஸ்ரீஹரியை பலவாறு துதித்து தம்மை விரோதித்தவர்களை மன்னித்து, ஸ்ரீஹரி திருவடியில் சேர்த்துக் கொள்ளுமாறு பிராத்தித்தார். 

துஷ்டர்களையும், சத்ருக்களையும் ஸ்ரீஹரியின் பக்தர்களாகவே பார்க்கும் குணமுடைய ஜெயதேவரின் வேண்டுகோளை ஏற்று, ஸ்ரீஹரி அவருக்கு தரிசனம்தர, மன்னனும் அக்காட்சியைக் கண்டு, மனம் மகிழ்ந்து இறைவனை வணங்கினான். அந்தக்கணமே ஜெயதேவர் தாம்  இழந்த கைகளும் கால்களும் திரும்ப வரப்பெற்றார். இதனைக்  கண்ட அரசன், ஜெயதேவரின் துணைவியாரை பல்லக்கில் அழைத்து வருமாறு கட்டளை பிறப்பித்தான். அவ்வாறே ஜெயதேவரின் துணைவியார், பத்மாவதி அம்மையார் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டார். தம் கணவரின் புதிய நிலையினைக் கண்ட அவ்வம்மையார், ஆனந்த கண்ணீர் வடித்து, இறைவனை உளமார பிராத்தித்தார்.
  
அரசன் பத்மாவதி தேவியாரை உபசரித்து, கவனித்துக் கொள்ளுமாறு தம் அரசிகளுக்கு அறிவித்தார். அவர்களும் அவ்வாறே பத்மாவதி தேவியாருடன் அன்புடனும், மரியாதையுடனும் பழகி, ஸ்ரீகிருஷ்ண லீலைகளை கேட்டு மகிழ்ந்தனர். 


ஒரு நாள் அரசியாரின் சகோதரனின் மரணச் செய்தியும் அவருடன், அவர் மனைவி உடன் கட்டை எரியதாயும் செய்தி வந்தது. வேதனை அடைந்த அரசியாருக்கு, பத்மாவதி தேவியின் மௌனம் அதிசயமாக இருந்தது. அரசியாரின் சகோதரரின் மனைவி உடன்கட்டை ஏறியது, ஏழு பிறவியிலும், அவர்கள் தம்பதியாக இருப்பார்கள் என்று கருத்தல்லவா? என பத்மாவதியிடம் கேட்டார். அதற்கு, பத்மாவதி தேவி, கணவன் இறந்ததை கேட்ட உடனே மனைவி தற்கொலை செய்துகொள்ளலாமே தவிர, உரிருடன், நெருப்பில் விழுவதில், தனக்கு உடன்பாடில்லை என கூறினார். சூரியன் மறைத்தும், சூரிய கிரணங்கள் தானே மறைவது போலே மறைய வேண்டும் என்று கூறினார்.    

அரசியாருக்கு, தேவியாரின் கூற்று பொய்மையாக மனதில் பட, சோதிக்க நினைத்தார். அன்று, அரசர் ஜெயதேவருடன் வேட்டையாட கானகம் சென்றார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, தன் மந்திரியுடன், ஜெயதேவர் காட்டில் புலி அடித்து இருதுவிட்டார், என்ற பொய் செய்தியை ஊரெங்கும் அறிவிக்கச் செய்தார். இச்செய்தி பத்மாவதி தேவியாரின் செவியில் விழ, உடனே அவர் மரணம் அடைந்தார். அதைக்கண்ட அரசியார் அதிர்ச்சி அடைந்தார்.

அரசன், அரண்மனை வந்ததும், இச்செய்தியால், அதிர்ச்சியும், வேதனையும் அடைந்து, பத்மவதியர் இருக்கும் இடம் சேர்ந்தார். மந்திரியார் மூலம், இந்த பொய்யான நாடகத்தை அறிந்த அரசன், அரசியாரை கொல்ல நினைத்தார். ஆனால், பெண்ணை கொள்வது பாவமாதலால், தன்னையே நெருப்பில் அஹுதி ஆக்க முற்பட்டார். நகரத்தின் வெளியே நெருப்பு மூட்ட கட்டளையிட்டு, ஜெயதேவரிடம் வந்து தன்னால் ஒருக் இழிவு ஏற்பட்டதாக கூறி தன் மனநிலையையும் கூறினார். நடந்ததை தன் ஞான திருஷ்டியால் அறிந்த ஜெயதேவர் அரசனை சமாதானப்படுத்தி, பத்மாவதி தேவியாரின் உடல் முன் வந்து ராதா-மாதவ கானம் பாடி, "மஆதவா கோவிந்தா பக்த ரத்ஷகா, கஜேந்டிரன்னுக்கு, த்ரௌபதிக்கும் உடனே அருள் புரிந்தவா, இப்போது, எனக்கு அருள் புரிவையாகே' என பலவாறு துதி செய்து தன்னை மறந்து 24 சுலோகங்களாக 8 வரி கொண்ட ஸ்லோகங்களை பாடப்பாட ஸ்ரீ ஜெகநாதன், தன் பக்தன்னுக்காக இறங்கி வந்து ஜெயதேவரை அணைத்து, ஆசீர்வதித்து பத்மவதிதேவியாரை உயிர்ப்பித்தார். மேலும் ஒரு வரமாக, "இந்த உன்னுடைய பாடல்களை பாடுபவராயும், கேட்பவரையும் இருபோர்க்கு எப்போதும் நான் அவர்கள் அருகில் இருப்பேன்.", ஏனக்கூறி மறைதார்.

அரசனின் பண்பும் பக்தியும், ஜெயதேவரின் அருளால் இருமுறை தெய்வ தரிசனம் அடயச் செய்தது அல்லவா!!!

வியாசரின் அவதாரமான ஜெயதேவரின் இந்த 24 கானங்கலான [ராசா லீலைகள்] கீத கோவிந்தந்தை பாடுவோரின் எல்லாவிதமான இன்னல்களும் ஸ்ரீஹரியின் அருளால் சூரியனைக்கண்ட பனிபோல் விலகி ஹரிபக்தர் ஆவர்கள் என்பது நிதர்சனம். 


ஜெய் ஜெயதேவ மகாராஜ் 
ஜெய்   ஸ்ரீஹரி