Naamadevar

ஒரு நாள் பாற்கடல் நாயகனான ஸ்ரீவிஷ்ணு உத்தவரையும் சுகரையும் அழைத்து பூமியில் அவதரிக்குமாறு கூறினார். இதைக் கேள்வியுற்ற இருவரும் தங்கள் கர்பவாசம் இல்லாமல் சுயம்புவாக பிறக்க அனுகிரகிக்குமாறு வேண்டினர். ஸ்ரீ ஹரியும் இரண்டு நத்தைக் கூடு போல உள்ள சிறு வஸ்துவினுள்ளே இருவரையும் சிறு குழந்தைகளாக்கி அடைத்து மழை பெய்யும் காலத்தில் பூமியில் விட ஒன்று பாகிரதி நதியிலும், மற்றொன்று பீமாரதி நதியிலும் விழும்படி செய்தார்.

பாகிரதி நதியில் விழுந்த சிப்பிக்குள் இருந்த குழந்தை ராம் ராம் என ஜபித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்து சென்றது.   பீமாரதி நதியில் விழுந்த சிற்பி விட்டால் விட்டால் என ஜபித்துக் கொண்டு நீரின் போக்கில் மிதந்து சென்றது. சுகர் ராம நாமத்தையும், உத்தவர் பாண்டுரங்க நாமத்தையும் உச்சரித்தனர்.

தாமாஜி என்ற விஷ்ணு பக்தர் அவ்வூரில் வசித்து வந்தார். அவர் ஒரு தையற்காரர். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை, வயதும் ஆகி விட்டது. இருந்தாலும், அவரது மனைவி கோனாய், அவரை பண்டுரங்கனிடம் தமக்கு ஓர் குழந்தை வரம் கேட்கும்படி கூறினாள். அதைக் கேட்ட தாமாஜி, மனைவியின் அறியாமையையும், இந்த வயதில் இது வீன் ஆசை என்று கூரினர். இவ்வாறு மனைவியிடம் கூறிவிட்டு கோவிலுக்குச் சென்று மனைவியின் ஆசையை அவளுக்காக இறைவனிடம் பிராத்தித்துக் கொண்டு வந்து உறங்கினார். அப்போது, அவரது கனவில் இறைவன் தோன்றி, மறுநாள் பீமா நதிக் கரையில் உனக்கு ஓர் ஆண் குழந்தை கிடைக்கும் என சொல்லி மறைதார். திடுக்கிட்டு எழுந்த தாமாஜி, இதைத் தன் மனைவிக்குக் கூறினார். 

மறுநாள் காலை பீமா நதிக்குச் சென்று நீராடி தன் நித்யக் கர்மாக்களை முடித்த தமாஜியின் கண்களில் ஓர் பேழைப் போன்று சிப்பி ஒன்று மிதந்து வருவதைக் கண்டார். வியப்பும், மகிழ்ச்சியும் கொண்ட தாமாஜி கடவுளின் அருளை நினைத்து பலவாறு துதித்து அப்பேழையை எதுதுத் திறக்க அதனுள் அப்பொழுதுதான் பிறந்தது போன்ற ஓர் ஆண் குழந்தை இருந்தது. உடனே குழந்தையை எடுத்து தன் மேல் துணியில் சுற்றி எடுத்துக் கொண்டு விருது வீடு சென்றார். குழந்தையைக் கண்டதும் அவர் மனைவி பெருமக்ழிச்சி அடைந்து வாரி அணைத்துக் கொண்டார். உடனே அந்த வயதிலும் அவள் பால் ஊட்ட கடவுள் அனுக்ரஹித்தார். ஆசையோடும், அன்போடும் அனைத்துப் பால் ஊட்டி மகிழ்ந்தல் அவ்வன்னை. கடவுளின் பேரருளால் கிடைத்த அக்குழந்தைக்கு நாமா என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

ஒரு நாள். தாமாஜி தான் சந்தைக்கு போக வேண்டி இருப்பதால், வளர்ந்திருந்த நாமாவிடம், இறைவனுக்கு நெய்வேத்யம் குடுத்து அனுப்பும் படி மனைவியிடம் கூறினார். கொனாயும், மகனை அழைத்து பூஜை செய்யும் முறைகளைக் கூறி நெய்வேத்யம் படைத்து வீடு திரும்புமாறுக் கூறி, பூஜை சாமான்களுடன் அவனை பண்டரிநாதன் கோவிலுக்கு அனுப்பி வைத்தாள். நாமாவும், தாய் சொன்னதைப் போல இறைவன்னுக்கு நீரட்டி, மஞ்சள் ஆடை உடுத்தி சந்தன குங்குமம் பூசி, தூப தீபங்கள் காட்டி நெய்வேத்யமாக அம்மா கொடுத்ததை பண்டுரன்கனின் முன் வைத்து, 'பாண்டுரங்க, அப்பா சந்தைக்குப் பொய் உள்ளார் ஆகவே நான் வந்துள்ளேன். இந்த சாப்பாடை சீக்கிரம் சாப்பிடு' எனச் சொல்லி உட்கார்ந்துக் கொண்டான். இவன் வந்து சாப்பிடவில்லை. வேதனையும், அழுகையும் மேலிட நாம மறுபடி, மறுபடி வேண்டினான். 'அம்மா கோபிப்பாள்' எனச் சொல்லி அழுதான். அவனது அறியாமையும், அன்பையும் கண்ட இறைவன் உடனே வந்து அவனதுப் படையலை ஏற்றுக் கொண்டு அவனையும் அனைத்துக் கொண்டு விட்டு மறுபடி மறைந்தார்.

 வீட்டுக்கு வந்ததும் தாய் பிரசாதமாக நைவேத்யத்தை எதிர்ப்பார்த்தவள் பிள்ளை வெறும் தட்டுடன் வருவதைப் பார்த்து யாருக்கு உணவைக் கொடுத்தாய் என வினவினாள். குழந்தையும் நடந்ததைக் கூறினான். இதை அறிந்த தந்தை இதை நம்பாமல், மறுநாள், 'வா என்னுடன்' என மகனையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போனார். வழக்கப்படி பூஜைகள் செய்து விட்டு இன்றும் கடவுளை சாப்பிட அழைத்தான் நாமா. ஆனால் இறைவன், 'நாமா நீ தந்தையுடன் வந்துளாய், ஆகையால் நான் நேரடியாக வரமாட்டேன்.' என கூறினார். ஆனால் குழந்தை அடம் பிடித்து, 'இன்று நீ வந்து சாப்பிடாவிட்டால், என தந்தை எனை அடிப்பார்.' என சொல்லி அழ ஆரம்பித்தான். குழந்தையின் அழுகையால் இறைவன் அவனது அன்பிற்கு இணங்கி சிரித்தபடி வந்து உணவை அருந்தி தாமாஜிக்கும் தரிசனம் தந்து மறைந்தார். வியப்பும் ஆனந்தமும் பொங்க தாமாஜி, தம் மகனை அனைத்துக் கொண்டு, 'நீ என வீட்டில் பிறந்ததால் நான் பெரும் பாக்கியம் அடைந்தேன்.' என சந்தோசித்தார். வீடு சென்று மனைவியிடமும் நாமாவின் பக்தியால், தனக்கும் கடவுள் தரிசனம் கிட்டியதைக் கூறினார். இவன் ஹரியின் பெரும் பக்தன் என இருவரும் மகிழ்ந்தனர். 

நாமா வளர்ந்து பெரியவனானான். அவனது பெற்றோர்கள், அவனுக் கேற்ற நல்ல பண்புடன் கூடிய 'ராஜாயி' என்ற பெண்ணை அவனுக்கு மணமுடித்தனர். அவர்கட்க்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நாராயணா என்று பெயரிட்டனர். நாம எப்போதும் இறை சிந்தனயிலேயே இருந்தார். 

ஒரு நாள், நாமாவின் தாய், தன் பிள்ளையிடம், ''அப்பா, எங்களுக்கு வயதாகி விட்டது, நீ உன் குடும்பத்தை கவனிக்காது, என்நேரமும் விட்டால் பக்தியில் முழுகி இருந்தால் குடும்பத்தை கவனிக்க வேண்டாமா?'', என்று வேதனையுடன் கூறினாள்.


தாயின் வார்த்தைகளால், வேடனை அடைந்த நாமா, கோவில்லுக்குச் சென்று "பண்டரிநாதனிடம் விருப்பமில்லாது எனக்கு குடும்பக் வாழ்வை அழித்து இப்போது அவர்களைக் காக்கும் பொறுப்பையும் கொடுத்தாயே ஹே பண்டரி நாதா, நான் உன்னைத் தவிர யாதொன்றும் அறியேனே", என்று பலவாறு வேதனையுடன் பிராத்திக்க, பண்டரி நாதன் சிரித்தவுடன், "நாமா, nii என கவலைப் படுகிறாய், நீ வேறு நான் வேறு அல்லவே" எனக் கூறி சமாதானப் படுத்தினார். ஆனால், நாமா, "ஈஸ்வரா, நீயும் நானும் எப்படி ஒன்றாக முடியும். நீ பாற்கடலில், பட்டுப் பீதாம்பரம் அணிந்து, ஸ்ரீ லக்ஷ்மி தேவியுடன், சர்வ அலங்காரபூஷிதனாய், தங்கத் தட்டில் சாப்பிடுகிறாய். என் வீட்டிலோ, உடுக்க உடையும் சரியாக இல்லை, உன்ன உணவும் இல்லை. இப்படி இருக்கையில், என வேதனை உனக்கு புரியவில்லையா" எனக் கூறினான். மாயக் கண்ணனான பண்டரிநாதன் புன்னகையுடன் மறைந்தான். 


வீட்டில், நாமாவின் மனைவி, தன் மாமியுடன் தனது கஷ்டத்தை கூறி வேதனைப்பட்டாள். இந்த வீட்டில் தனக்கு எந்த சுகமும் கிட்டவில்லை என ஆதங்கத்துடன் கூறினாள். பண்டரிநாதன் ராஜாயியின் வேதனையைப் புரிந்துக் கொண்டு ஒரு வியாபாரிப் போல வேடமிட்டு, ஒரு எருதின் மேல் கை நிறைய தங்கக் காசுகளுடன், நாமா கோவிலில் இருகயிலேயே நாமாவின் வீட்டைத் தேடி வந்தார். அவ்வீதியில் உள்ளவர்கள், துளசி செடி நிறைந்துள்ள ஓர் குடிலில் ஸ்ரீ பண்டரி நாதனுக்கு துளசி மாலை சூடி உள்ள வீடே நாமாவின் வீடு என அடையாளம் காட்டினர். அவ்வீட்டு வாசலில் நின்று கொண்டு நாமாவின் நண்பன் வந்திருக்கிறேன் என்று கூறினார். வேதனையுடன் இருந்த ராஜாயி, ''எங்கள்ளுக்கு யாரும் நண்பரோ உறவினரோ  இல்லை என்றும். மேலும் எஜமானர் வீட்டில் இல்லை" என கதவின் பின் இருந்தவாறு கூறினாள். இதைக் கேட்ட ஸ்ரீஹரி, "சீக்கிரம் வெளியில் வாருங்கள், என பெயர், கேசவ் சேத், நான் நாமாவின் தோழன். உங்கள் வீட்டில் உணவு இல்லை. நீங்கள் மிகவும் கஷ்டப்படுவதை கேள்வயுற்று தங்க நாணயங்கள் கொண்டு வந்துளேன், வாங்கிக் கொள்ளுங்கள்" என்றுக் கூற. உடனே ராஜாளி அவரை வரவேற்று உட்காரும் படி கூற, அவர் கொடுத்த தங்க நாணயங்களை வாங்கிக் கொண்டார். மேலும் இருந்து உணவு அருந்திச் செல்லுமாறு வேண்டினாள். அனால் வந்தவர், ''நாமா இல்லாமல் தன் அருந்த விரும்பவில்லை'' எனக் கூறி உடனே சென்று விட்டார். 

இது எதுவும் அறியாத நாமாவின் தாய் கோவிலுக்குச் சென்று ஹரியே சர்வம் என்ற மயக்கத்தில் இருந்த நாமாவை பலவாறு நிந்தித்து வீட்டுக்கு வரும்படி அழைத்தார். தன் நிலை மறந்திருந்த நாமாவிற்கு எதுவும் தெரியவில்லை. நாமாவின் தாய் கோனாய்க்கு பண்டரிநாதன் மேல் கோபம் திரும்பியது. தன் மகனை இறைவன் தன் அடிமை ஆகிக்கொண்டு தன்னையும் அவன் குடும்பத்தையும் கஷ்டத்தில் ஆழ்தியது இந்த பாண்டுரங்கனே என பலவாறு நிந்தித்தால். அவளது மகனின் மேல் உள்ள அன்பே அவளது கோபத்திற்கு காரணம் என அறிந்த பாண்டுரங்கன் அவளை நோக்கி, ''உன் மகனை நி அழைத்துச்செல்'' என்று கூறி மறைந்தார். 

நாமாவின் கையைப் பிடித்துக் கொண்டு வீடு திரும்பினாள் கோனாய். வீட்டில் மருமகள், ராஜாயி சமைத்து வைத்துக் கொண்டு அலங்கார அணிமணிளுடன். இருந்ததைக் கண்டனர். இருவரும் கரணம் கேட்க, ராஜாயி வந்த வணிகரின் உதவிகளைக் கூறி கணவனின் நண்பனான 'கேசவ சேத்' கொடுத்ததாகக் கூறி தங்க நாணயப் பையை காட்டினார். நாமாவிற்கு விஷயம் புரிய ஆரம்பித்தது. ஸ்ரீ பண்டுரன்கனே தனக்காக, கேசவ சேத் ஆகா வந்துள்ளார் என ஆனந்தக் கண்ணீர் பொங்க கூறினார். மேலும் இந்தத் தங்க நாணயங்களை எல்லோருக்கும் வாரி வழங்குமாறு கூறிவிட்டு, உத்தவரின் மறு அவதாரமான நாம மறுபடி ஸ்ரீ பாண்டுரங்க மகிமைகளைப் பாடிக் கொண்டு ஆலயம் சென்றுவிட்டார்.

ஜெய் ஸ்ரீ நாமதேவ !!