பக்த கபீர்

ஸ்ரீஹரியின் விருப்பப்படி, பாகிரதி நதியின் நீரோட்டத்தில் மிதந்து வந்த சிப்பியானது மணிகர்ணிகா காட் என்னும் இடத்தில், கங்கையில் ஒரு முகமதியரின் கையில் கிடைத்தது. அந்த முகமதியர் ஓர் நெசவாளி. கங்கையில் அந்த மணிகர்ணிகா காட் என்னும் இடத்தில் தன் நேசவுக்கான நூல் கட்டுகளை அலசிக் கொண்டிருக்கையில் இந்த சிப்பி மிதந்து வருவதையும் அதனுள் இருந்து ஏதோ சப்தம் வருவதையும் அறிந்து அடுத்துப் பார்த்தார். அதனுள், ஓர் ஆழகான குழந்தை ராம நாமம் ஜபித்தபடி இருந்ததைக் கண்டார். ஆனந்தம் அடைந்த அவர், அக்குழந்தையை ஓர் துணியில் சுற்றி வீட்டிற்க்கு கொண்டு சென்றார். அதைக் கண்ட அவரது மனைவி குழந்தையை வாங்கி அன்புடன் மார்போடு அனைத்துக்க் கொண்டார். இறைவன் அருளால் அவள்ளுக்கு, அக்குழந்தைக்கு பாலூட்டும் பாக்கியம் கிட்டியது.  இச்செய்தி ஊரில் உள்ளோர்க்கெல்லாம் தெரிய வர அவர்கள் எல்லோரும் குழந்தையின் அழகையும், அதன் வாயில் இருந்து வரும் ராம் ராம் என்ற சப்தத்தையும் கேட்டு வெகுவாக வியந்தனர். மேலும் சிலர், ஓர் முகமதீனுக்கு எவாறு இக்குழந்தை கிடைத்தது? இது விஷ்ணுபக்தயுள்ள குழந்தையாக உள்ளதே என ஆச்சர்யப்பட்டனர். இன்னும் சிலர், இந்த கமால் பூர்வ ஜன்மத்தில் நிறைய புனியம் செய்தவனாக இருப்பான். அதன் காரணமாகவே இக்குழந்தை அவனுக்கு கிடைத்துள்ளது என பலவாறு பேசிக்கொண்டு சென்றனர். கமால் தம்பதியினர், அக் குழந்தைக்கு 'கபீர்' என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

கபீர் நன்றாக வளரிந்து திருமண வயதை அடைந்தான். அவனுக்கு மனம் செய்வித்து தனுடைய நெசவுத் தொழிலையும் செய்யவைத்தார். ஆனால் கபீர் இறைவனின் நினைவைத் தவிர எந்தவித பற்றுதலும் இல்லாமல் இருந்தான். உயர்ந்தது தாழ்ந்தது என்ற எந்த பேதமும் இல்லாமல் எல்லாம் இறைவன் சொத்துக்கள் என சம பதியுடன் வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் தன் ஆடை நெய்வதற்காக  உட்கார்ந்த கபீர் சிறிது நேரத்திலேயே  ராம ஸ்மரனத்தில் முழ்கி விட்டார். அங்கு வந்த அவரது தாயார் கபீரின் நிலைக் கண்டு, அவரை உளுக்கி எழுப்பினார். மறுபடி தன்னிலை வந்த கபீர் துணி நெய்ய ஆரம்பித்தார். ஆனால் அவரால் சிறிது நேரமே அந்தப் பணியில் இருக்க முடிந்தது. மறுபடியும் ராம ஸ்மரனத்தில் தன்னிலை மறந்தார். இதனைக் கண்ட ஸ்ரீ ராமன் பக்தவத்சலன் கபீரின் வேலையே தானே செய்ய கபீரின் இல்லம் வந்தார். கபீரின் வேலையை செய்யவும் ஆரம்பித்தார். கபீருக்கு சுய நினைவு வரும் பொழுது ஸ்ரீ ராமன் மறைந்து விடுவார். இவ்வாறே ஒரு வழியாக அந்தத் துணி நெய்து முடிக்கப்பட்டது. அதைக் கபீர் தாயிடம் கொடுக்க தாயின் ஆணைப்படி கடையில் விற்று பணம் வாங்கி வர சென்றார். ஆனால், பஜாரில் மற்ற வியாபாரிகளுடன் உட்கார்ந்த கபீர் மறுபடியும் ராம ஸ்மரனத்தில் தன்னை மறந்தார்.

அந்தப் பட்டுத்  துணியைப் பார்த்தவர்கள், தங்களுக்கு அதை வாங்கும் வசதி இல்லததுபோல நினைத்து ஒருவரும் கபிரிடம் வந்து விலைக் கேட்க வில்லை. காரணம் இறைவனும் கபீரும் சேர்து நெய்த அந்த துணி அவர்களின் கண்களுக்கு மிக உயர்த பொருளாக தோன்றியது. அதனால், மாலை வரை யாரும் விலை கேட்டு முன் வரவில்லை. அந்தி நேரம் எல்லா வியாபாரிகளும் சந்தையை விட்டு போய்விட்டனர். கண்விழித்து பார்த்த கபீர் தன் பொருள் விற்கவில்லையே என நினைத்த அவருக்கு தாயின் நினைவு வந்தது. தாயார் கோபித்துக் கொள்வாரே என மிக வேதனை அடைந்தார்.

இரவு நெருங்கும் வேலையில் எதிரே ஓர் காலியான வீடு ஒன்றை கபீர் கண்டார். உடனே தன் வீட்டிற்கு போகும் என்னத்தை விட்டு அந்த காலியான வீட்டிற்கு நுழைந்தார். மறுபடி ராம ஸ்மரனையில் ஈடுபட்டார். கபீரின் நிலைமையைக் கண்ட இறைவன் அவரை சோதிக்க எண்ணி ஓர் வயதான பிராமணனாக தன்னை மாற்றிக் கொண்டு கபீர் இருந்த விட்டிற்குள் நுழைந்து தான் குளிரால் மிகவும் நடுங்குவதால் தனக்கு ஏதேனும் போர்த்திக் கொள்ள துணி கொடுக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். அந்த வயதானவரின் நிலைக் கண்ட கபீர் தான் நெய்து கொண்டு வந்த துணியை பாதியாகக் கிழித்து வந்தவருக்கு கொடுத்தார். வந்த வரும் நன்றியுடன் வங்கிக் கொண்டு சென்றார். கபீரின் தயாள குணத்தை மேலும் உலகுக்கு உணர்த்த இறைவன் மறுபடி ஓர் பகிரியின் [பிச்சைக்காரன்] உருவை எடுத்து வந்து கபீரின் வீட்டு வாசலில் சிவந்த கண்களுடனும் கையில் ஓர் மனிமாலையுடனும், காலில் ஓர் ஆபரணமும் அணிந்து கொண்டு உள்ளே நோக்கி, ''உன்னிடமுள்ள உடையைக் கொடு. உருவமும் குணமும் இல்லாத ராமனை ஏன் துதித்துக் கொண்டுள்ளாய்" என கோபத்துடன் அட்டகாசமாய் சிரித்துக் கொண்டே கேட்டான்.    அதைக் கேட்ட கபீர்,  ''உருவமில்லாத கடவுள் பக்தனுக்காக உருவத்துடன் தரிசனம் தருவான். அவன் குனதீதன், எல்லா குனங்கல்லுக்கும் அப்பாற்பட்டவன்'' என கூறினார். இதை எல்லாம் கேட்க விரும்ன்பாத பகீர் சீக்கிரம் அந்த துணியை தருமாறு நிர்பந்திக்க, கபீரும் அதனை அவருக்கு அளித்து விட்டு நிமதியாக மறுபடியும் ராம நாமம் சொல்ல ஆரம்பித்தார்.

கபீரின் மகிமையை உலகுக்கு காட்ட நினைத்த இறைவன் மறுபடி சோதிக்க எண்ணினான். உடனே ஓர் பிராமண உருவம் கொண்டு கபீரின் தாயிடம் சென்றார். அவரிடம், கபீர் சந்தையில் துணியை யார் கேடும் விலைக்கு விற்காமல் யாருக்கோ தனம் செய்து விட்டு அங்குள்ள ஓர் வீட்டிற்க்குள் உட்கார்ந்திருப்பதாக புகார் சொல்ல, கபீரின் தாய்க்கு முகுந்த கோபம் உண்டாயிற்று. கபீர் வீடிற்கு வந்ததும் சரியான தண்டனை தருவதாக கூறினார். ஆனால், அந்த பிராமணர், அவளை விடுவதாக இல்லை. மேலும், அவர், கபீர் அவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு வரமாட்டார், ஆகையால் தன்னுடன் வந்தால், அவர் இருக்கும் இடத்தை காட்டுவதாக கூறினார். ஆத்திரத்தில் உள்ள கபீரின் தாய் உடனே அவருடன் புறப்பட்டாள். கபீர் தங்கி உள்ள இடத்தை பிராமணர் சற்று தூரத்தில் இருந்து காண்பித்தார். கோபத்துடன் வீட்டினுள் நுழைந்த கபீரின் தாயார், கபீரை பார்த்து, ''எங்கே அந்த சால்வை?, கொடு என்னிடம்" என பலமுறை கேட்டும் உலகையே மறந்திருந்த கபீருக்கு இந்தக் குரல் கேட்கவே இல்லை. இதனால்  கோபமுற்ற தாய் செய்வதறியாது நிற்கையில் பிராமண ரூபத்தில் உள்ள ஸ்ரீ ஹரி ஓர் கம்பை கொடுத்து கபீரை அடிக்கச் செய்தார். கபீரின் மேல் விழுந்த ஒவ்வோர் அடியும் வெளியில் நின்றிருந்த அந்த பிராமணருக்கு வலி ஏற்படுத்தியது. கபீர் இந்த அடிகளுக்கெல்லாம் ஒன்றும் தெரியாதவராகவே மெய் மறந்திருந்தார். அந்தத் தாயின் அடிகளால் வலி பொறுக்காத இறைவன் அந்த பிராமண ரூபத்தை விடுத்து சீத சமேத ஸ்ரீ ராமனாக கபீரின் முன் தோன்றினார். அப்போதுதான் கண் விழித்த கபீர் சர்வலங்கார பூஷிதனாக வில்லேந்திய ராமனை சீதாதேவியுடன் கண்டு மகிழ்ந்து அவரது சரனத்தில் வீழ்ந்து வணகினார். ஸ்ரீ ராமனின் தோற்றத்தை கண்ட கபீரின் தாயும் உடல் நடுங்க அஞ்சலி செய்த வண்ணம் நின்றார்.  மேலும், ''தாயே நீ மிகவும் அதிர்ஷ்டம் ஆனவள்'' என ஆசிர்வதித்தார். அந்த தாயும் மகனை நினைத்து பெருமைப் பட்டு கபிரால் தனக்கு தெய்வ தரிசனம் கிட்டியதை நினைத்து கபிருடன் வீடு செல்ல புறப்பட்டாள். ஸ்ரீ ஹரியும் தன் பக்தனை ஆசிர்வதித்து மறைந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் கபீரின் தாயாரும் கடவுளின் த்யானத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டார். கபீரின் மனைவி கணவனுக்கு ஏற்றவளாகவே இருந்ததால் அவர்கள் இருவரும் எந்த ஒருக் கஷ்ட நஷ்டங்களையும் ஓர் பொருட்டாக எண்ணாமல் வாழ்கையை நடத்தி வந்தனர். இறைவன் அருளால் அவர்கள்ளுக்கு ஓர் மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு கமால் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். கமாலும் எல்லா நற்குணங்களும் பொருந்தியவனாக இருந்தான். கமால் தனக்கு 7 வயதாக இருக்கையில் தான் த்வாரகை செல்ல விரும்புவதாக கூறினான். சிறு வயதிலேயே அவனது அவனது இறை ஈடுபாட்டைக் கண்ட கபீர் உடனே அவனுக்கு அனுமதி கொடுத்தார். தாய் தந்தையாரின் அனுமதியுடன் கமால் தனது தவறாக பயணத்தை தொடர்ந்தான். வழியெல்லாம் ராம கானம் பாடியபடி துவாரகையை அடைந்தான். இடையில் கோமதி நதியில் நீராடி தன் முந்தைய பாவங்கள் தொலையவும், பிறப்பில்லாது தன்னை காக்குமாறு வேண்டி, அந்த நதியில் பல சடங்குகள் செய்து துவாரகையை அடைந்து இறைவன் சந்தியின் முன் நின்று வணங்கினான். நான்கு மாதங்கள் துவாரகையில் தங்கி, ஹரி கீர்தனன்களால் அங்குள்ள மக்களையும் மகிழ்வித்தான்.

மூன்று வேலையும் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் செய்யாமல் கமால் இருந்ததில்லை. முடிவில், ஸ்ரீ கிருஷ்ணனிடம் தன் மறுபடி இங்கு வந்து தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று பிராத்தித்து தன் பயணத்தை தொடர்ந்தான். வழியில் சித்திரகூடம் என்னும் ஓர் இடத்தில் ஒரு ஹரி பக்தனான வியாபாரி இவனை தன் இருப்பிடம் அழைத்துச் சென்று உபசரித்தான். மறுநாள், அவ்வூர் மக்கள் மத்தியில் ஹரி கீர்த்தனம் செய்து பின் மண நிறைவுடன் புறப்பட தயார் ஆனான். அப்போது அந்த வியாபாரி தன் அன்பின் பரிசாக கமாளுக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என எண்ணினான். ஆனால், பணம் கொடுத்தால் கமால் ஏற்றுக் கொள்ளமாட்டான் என தெரிந்து ஓர் விலை மதிக்க முடியாத ஒளி மிகுந்த மாணிக்கக் கல் ஒன்றை அவனது காலடியில் சமர்ப்பித்து ஏற்ற்றுக் கொல்ல வேண்டினான். ஆனால் கமால் அதற்கு பல சமாதானங்கள் சொல்லி மறுத்து விட அந்த வியாபாரி கமாளுக்கு தெரியாது அவனது ஆடையில் முடிந்து வைத்து விட்டார்.

காசியில் தன் வீட்டிற்கு வந்த பிறகு இந்த மாணிக்கக் கல் தன்னிடம் உள்ளதை கமால் அறிந்து, நடந்ததை தன் தந்தையிடம் கூறி அதை அவரது காலடியில் வைத்தான். அதைக் கண்டதும் மிக்க வேதனை அடைந்த கபீர் மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அவரது மனைவி அவரை சமாதானப் படுத்தி காரணம் கேட்டார். தன் மகன் ஏதோ ஒரு மறைமுக ஆசையால் தான் இந்த மாணிக்கத்தை கொண்டு வந்துள்ளான். ராம நாமைத்தை இந்த மாணிக்கக் கல்லுக்கு விற்றுள்ளான் என மிகவும் வேடனை அடைந்தார் கபீர். இதக் கேட்ட கமால், அந்த மாணிக்கக் கல்லை எடுத்துக் கொண்டு மறுபடி அந்த வணிகனைக் கண்டு அவனிடமே ஒப்படைத்து விட்டு வீடு திரும்பினான். இதைக் கண்ட பின்தான் தன் மகனை ஆரத் தழுவிக் கொண்டார்.

ஒரு நாள் மாலை நேரம் யாத்ரிகர்களாக சில சாதுக்களும் சன்யாசிகளும் கபீரின் இல்லத்துக்கு வந்தனர். அவர்களை அன்புடன் வரவேற்ற கபீர் அவர்களை தன் வீட்டிலேயே அன்றிரவு தங்குமாறு வேண்டினார். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யுமாறு மனிவியிடம் கோரினார். அனால் வீட்டில் சமையலுக்கு வேண்டிய சாமான்கள் எதுவும் இல்லை. இதை அறிந்த கபீர் தன் மகனை, தன்னுடன் வரும்படி அழைத்துக் கொண்டு ஓர் கடைக்கு வந்தார். அங்கு வியாபாரி தூங்கிக் கொண்டிருந்தார். கடை அடைக்கப் பட்டிருந்தது. இதைக் கண்ட கபீர் வீட்டுக்கு சென்று கடையை வுடைத்து சாமான்களை கொண்டு வர தகுந்த ஆயுதங்களுடன் கடைக்கு வந்தார். கடையை உடைத்து இருவரும் உள்ளே சென்று சமையலுக்கு வேண்டிய சாமான்களுடன் ஒரு மூட்டைக கட்டிக் கொண்டு வெளியே வந்தார். அந்தக் கடையில் பணமும், துணி மணிகளும், இன்னும் மற்ற பொருள்களும் இருந்தன. ஆனால், அவர் அதையெல்லாம் எடுத்துக் கொள்ளாமல் அன்றைக்கு சாதுகளுக்கு சமைத்து அன்னமிட தேவையான பொருட்களை மட்டுமே எடுத்துக் கொண்டனர். கபீர் மூட்டயுடன் வேகமாக நடக்க ஆரம்பித்தார். ஆனால், சிறுவனான கமாலின் மனம் தம் கடைக்காரரிடம் சொல்லாமல் போவது தவறு என தோன்றியதால், கடைக் காரரை எழுப்பி, "உன் கடையில் இரண்டு திருடர்கள் நுழைந்து சாமான்களை திருடிச் செல்கின்றனர்." என சொல்லி விட்டு தந்தையை பின் தொடர்ந்தான். விஷயம் அறிந்த கடைக் காரர், காமாலை விரட்ட, கமால் ஒரு சின்ன சந்துக்குள் நுழைந்து ஓட முயற்சித்தான். அப்போது இரு கல் தூண்கலுக் கிடையில் அகப் பட்டுக் கொண்ட அவன் உடல் ஓட முடியாமல் மாடிக் கொண்டது.