பக்தவிஜயம்

ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீஹரி பக்தர்களின் வரலாற்று களஞ்சியம் இந்த பக்தவிஜயம் என்ற நூல். இது குரு வசிஷ்டரின் வம்சாவழியில் வந்த மஹிபதி என்பவரால் பல மகான்களால் எழுதப்பட்ட நூல்களிலிருந்து திரட்டி எடுக்கப்பட்டது.  அவரது கதைகளை நான், என்னால் இயன்ற அளவு மொழி பெயர்த்துள்ளேன்.

ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம் முடிந்து கலியுகம் பிறந்ததும், பல விதங்களிலும் தர்மம் நிலை குலைந்து பொய்மையே வாழ்க்கையாக மக்கள் வாழ்ந்தனர். வேத அனுஷ்டானங்கள், சம்பிரதாயங்கள், எல்லாம் சீர் கெட்டு, பக்தி என்பதையே மக்கள் மறந்து வாழ்ந்தனர். இந்தனை கண்ட ஸ்ரீ ஹரி, தம் பக்தர்களையும், மக்களையும் காக்கும் பொருட்டு, தனது பக்தர்களை பல இடங்களில் பிறக்க செய்து, தாமும் அவதாரம் எடுக்க முடிவு செய்தார். எவ்வாறு தன் முந்தைய அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தில், அருஜுனனுக்கு, கீதையை உபதேசிக்கும் பொழுது, "தர்மம் நிலை குலையும் பொழுதெலாம் நான் அவதரிப்பேன்" என்று கூறினாரோ அதே போல், கலியுகத்திலும் தான் புத்தராக அவதரிக்க போவதாக அறிவித்தார். தம் பக்தர்களையும் ஒவ்வோரிடத்திலும் பிறக்கும்படி கட்டளை இட்டார்.

அதன்படி பண்டரிபுரத்தில் உத்தவரையும் மதுராவில் அக்ரூரரையும், தாரூக் என்னும் பக்தரை ராமதாசராகவும் அவதரிக்க செய்தார். கிழக்கு ஜகந்நாதபுரியில் வியாசரையும், ஹஸ்தினபுரத்தில் வால்மீகியையும் அவதாரம் எடுக்க செய்து ஸ்ரீ கிருஷ்ண பக்தி வளர வழி செய்தார். 

ராமவதாரத்தில், வாரங்களாகவும், கிருஷ்ணாவதரத்தில் கோபாலர்களாகவும் அவதரித்த பக்தர்களை இந்த கலியுகத்தில் புத்த அவதாரத்தில் மேற் கூறியபடி, இந்தியாவின் நான்கு திசைகளிலும் மறுபடியும் பிறந்து மக்களிடையே பக்தியை வளர்க்குமாறு கட்டளை இட்டார்.  

ஸ்ரீஹரியின் கட்டளையால் மனம் மகிழ்ந்த பக்தர்கள் மனிதகுல நன்மைக்காக  உலகில் அவதரித்தனர். உத்தவர் நாமதேவராக பண்டரிபுரத்தில் தையல் வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்தார். இவ்வாறாக, சுகப்ரம்மம் முகமதிய இல்லத்தில் கபீராகவும், வால்மீகி, பிராமண இல்லத்தில் துளசிதாசராகவும், தாருகர், தாகூர் என்னும் இடத்தில் இராமதாசராகவும்   பிறந்தனர்.       


பின் சிவபெருமானை [ருத்ரன்] நோக்கி ஸ்ரீஹரி தங்கள் 'நரசிமேதாவாக ஜுனகாத் மக்களின் அறியாமையை விலக்கி பக்தியை வளர செய்யுமாறு வேண்டினார்.

ஸ்ரீஹரி தான் த்யாநேஸ்வரராக பிறந்து, பகவத்கீதையின் மகிமைகளை ஜுனகாத் மக்களுக்கு போதிக்க அவதரிபதாக கூறினார். அதேபோல் பிரமதேவர், சோபன் என்ற பக்தராகவும், சதாசிவன், நிவ்ருதி என்ற பெயருடனும், ஆதி மாயா முக்தாபாய் என்ற பெயருடனும் பிறந்தனர். இவ்வாறாக கலியுகத்தில், தர்மத்தையும், பக்தியையும் நிலைநாட்ட நம் தேசத்தில் அவதரித்தனர். 

இனி அவர்களின் மகிமைகளை பார்ப்போம்.