ஸ்ரீஹரியின் விருப்பப்படி வியாச முனிவர் ஒரு பிராமண குடும்பத்தில் துந்துபில்வா என்னும் ஊரில் ஜெயதேவராக அவதரித்தார். சகல புராண இதிகாசங்களையும் கற்றறிந்த அவர், கடவுளின் புகழ் பாடுவதே இந்த கலியுகத்தில் சிறந்த வழி என தெரிந்து கொண்டார். அவர் காலத்தில், கிருஷ்ண நாம ஜபம் பிரசித்தியாக இருந்தபோதிலும், இவர் கிருஷ்ண லீலைகளை பாடலாக கீதகோவிந்தம் என்ற பெயரில் எழுதினர். இவை பத்மபுரானத்தின் படியான கருத்துக்கள்ளாகும்.
இதில் ராதா-மாதவ பிரேமையையும், கோகுலத்தில் கிருஷ்ணனின் லீலைகளைப் பற்றியும் பாடியுள்ளார். இதை பல பண்டிதர்களும், மக்களும் விரும்பிப் பாடலாயினர்.
இந்நிலையில் அதே ஜகன்னாத புரியின் அரசரும் ஸ்ரீகிருஷ்ணனை பற்றிய பாடல்களை புத்தகமாக எழுதி, அதையே மக்கள் ஏற்க வேண்டும் என கட்டாய படுத்தினார். ஆனால், மக்கள் அதை விரும்பாததால் இருவரின் புத்தகங்களையும் ஸ்ரீ ஜகன்னாதர் ஆலயத்தில்வைத்து பூட்டி சிறந்ததை ஸ்ரீ கிருஷ்ணரே தீர்ப்பு செய்யட்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு அன்று இரவு அவ்வாறே செய்தனர்.
மறுநாள் காலை சந்நிதானம் திறந்து பார்க்கையில் ஸ்ரீ ஜெயதேவரின் பாடல்கள் மட்டுமே அங்கு இருந்தது. அரசரின் புத்தகம் வெளியே கிடந்தது . இதனால் தலைகுனிவு கொண்ட அரசன் ஸ்ரீ ஜகன்னதரிடம் பலவிதத்திலும் மன்னிப்பு கேட்டு, தன்னை ஏற்குமாறு வேண்டினார். அவருக்கு தான் ஓயிருடன் இருப்பதுவே கேவலமாக நினைத்தார்.
ஜெயதேவரின் திருமணம்
ஜகன்னாதபுரியில் ஆசாரமான குடும்பத்தை சேர்ந்த ஓர் பிராம்மணனுக்கு பத்மாவதி என்ற ஓர் பெண், அழகும், அறிவும் நிறைந்தவளாக இருந்தாள். அவளை மணக்க பல பேர் முயற்சித்தும் அந்த பிராம்மணன் தன் மகளை மணக்க தகுந்தவன் ஸ்ரீ கிருஷ்ணனே என்ற முடிவில் திடமாக இருந்தார். பத்மாவதியும், ஸ்ரீ கிருஷ்ண பக்தயாகவே இருந்தாள்.
ஒரு நாள், அந்த பிராமணனின் கனவில், ஸ்ரீ ஜெகநாதர் தோன்றி, தான் அவதாரத்தின் ஓர் அம்சமான ஜெயதேவருக்கு, பத்மாவதியை மணமுடிக்குமாறு சொல்லி மறைந்தார். விழித்தெழுந்த அந்த பிராமணரும் இதை சாட்சாத் ஸ்ரீ ஜெகநாதரின் கட்டளையாகக் கொண்டு ஜெயதேவர்-பத்மாவதி திருமணத்தை 4 நாட்கள் விமரிசையாக நடத்தி முடித்தார்.

அவ்வூரில், நற்குணங்களும், பக்தியும் பொருந்திய ஒரு வியாபாரியும் இருந்தார். அவர் ஜெயதேவரிடம் அன்பும் பக்தியும் கொண்டிருந்ததால், ஜெயதேவர் அவரை தம் சிஷ்யனாக்கி கொண்டார். அன்பும் பண்பும் நிறைந்த அந்த வணிகர், தம் குருவிற்கு சேவை செய்வதில் மிக்க மகிழ்ச்சி உடையவராய் இருந்தார். ஒரு நாள், தனவானான அந்த வணிகன், ஜெயதேவர் தான் இருப்பிடம் வந்து ஸ்ரீ கிருஷ்ண லீலைகளை கானம் செய்து எல்லா மக்களும் கேட்டு இன்புறச்செய்யுமாறு வேண்டினார். ஜெயதேவரும், அவரது வேண்டுகோளை ஏற்று பக்தி இல்லாதவர்கள் கூட இந்த கிருஷ்ண கானத்தில் லயிக்கும்படி செய்தார். இவாறாக பக்தனான் வணிகனின் ஆவலை பூர்த்தி செய்து ஒரு நாள் தம் இருப்பிடம் திரும்ப வணிகனிடம் விடைபெற குரு சேவையில் திளைத்த பக்தனான அவ்வணிகன் பிரியாவிடை கொடுத்தான். மேலும், குரு பொன்னும் பொருளும் விரும்பாதவராகையால், அவருக்கு தெரியாமல் பொன்னையும், பொருளையும் ஓர் வண்டியில் ஏற்றி குருவை அவ்வண்டியில் அமர்த்தி இரு காவலாளிகளை அவரது ஊர்வரை சென்று விட்டு வரச்செய்தான். மேலும், இபொருள்களை குரு பத்தினியிடம் பணிவுடன் ஒப்படைக்கும்படி சொன்னான். அக்காவலாளிகள் இருவரும், அவ்வண்டியுடன் சிறிது தூரம் சென்ற பின் வேறு ஒருவனை குருவிற்கு காவல் செல்லுமாறு கூறிவிட்டு, அவிருவரும் தம் வீடு திரும்பினர். சிறிது நீரம் கழித்து, அந்த வேலை ஆளும் ஜெயதேவரிடம் அனுமதி பெற்று வீடு திரும்பினான். இதனால், ஜெயதேவர் தானே வண்டியை ஒட்டிச்சென்றார். இதை எல்லாம் கவனித்த இரு திருடர்கள், ஜெயதேவரை வழிமறிக்க, அவர் அவர்களின் விருப்பம் அறிந்து வண்டியை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வீடு நோக்கி நடந்தார். சந்தேகந்துடன் ஜெயதேவரை பார்த்த திருடர்களுக்கு திடீர் என ஒரு யோசனை தோன்றியது. அதனால், மறுபடி திரும்பி வந்து, ஜெயதேவரை கொள்ள நினைத்தனர். எதோ எண்ணம் மனதில் தோன்ற, அவர்கள் ஜெயதேவருடைய கை கால்களை வெட்டி, அவரை ஒரு குழியில் தள்ளிவிட்டு சென்று விட்டனர்.
ஸ்ரீஹரி ஸ்மரனத்தில் இருந்த ஜெயதேவர் சிறிது நேரத்தில் நினைவிழந்தார். அபொழுது, அவழியே வேட்டையாட வந்தே கிரௌஞ்ச மன்னன், அம்மஹானைக் கண்டு தன் அரண்மனைக்கு எடுத்துசெல்ல உத்தரவிட்டான். அங்கு, அவருக்கு வேண்டிய வசதிகளையும், உபசாரங்களையும் செய்து கொடுத்தான். ஜெயதேவர் அவர்களின் சங்கீர்த்தனத்தில் மனம் ஒன்றிய அரசன், தானும் ஹரிபக்தனாக மாறினான். ஜெயதேவரின் உபதேசப்படி வரும் சன்னியாசிகளை உபசரித்து அவர்கள் ஆசி பெற்று வாழ்ந்து வந்தான்.
ரௌஞ்ச மன்னன், சனியாசிகளுக்கு பொன்னும், பொருளும் தருவதை அறிந்த அந்த திருடர்கள் தாங்களும் சன்யாசி வேஷம் தரித்து அரண்மனைக்குச் சென்றனர். ஆனால், அங்கு ஜெயதேவரைக் கண்டதும் மனதில் பீதி உண்டாயிற்று. இருப்பினும், ஜெயதேவர் தன் சிம்மாசனத்திலிருந்து ஊர்ந்து வந்து அவர்களை ஆரத்தழுவி, அவர்கள்ளுக்கு வேண்டிய உபசரனைகள் செய்து, அவர்கள் போகும் வரை நான்கு கவனித்து, வேண்டிய பொருட்களை கொடுத்து அனுப்புமாறு சொன்னார். மன்னனும் அவ்வாறே செய்து மேலும் இரு காவலாளிகளை துணையாக அனுப்பிவைத்தான்.
பாதிவழி செல்கையில், காவலாளிகள்ளுக்கு சந்தேகம் எழ, அந்த போலி சன்யாசிகளை நோக்கி, "ஏன் ஜெயதேவர் தங்களிடம் இவ்வளவு கருணை காட்டினர்.?" எனக் கேட்டனர். அதற்கு அந்த போலி சன்யாசிகள், "ஜெயதேவரும் நாங்களும் ஓர் அரசரிடம் பணி புரிந்தபோது நல்லெண்ணம் இல்லாத அந்த அரசன், ஏதோ ஒரு காரணம் சொல்லி, ஜெயதேவரை காட்டிற்கு கூடிச்சென்று கொன்று விடுமாறு கட்டளை இட்டார். ஆனால், நாங்கள் கொல்ல மனமில்லாது கை கால்களை வெட்டி உயிர்ப்பிச்சை அளித்தோம்", என்று பொய் உரைத்தனர். அப்போது, எதிர்பாராத விதத்தில் பூமி பிளந்து அவ்விருவரும் அக்குழியில் விழுந்து மடிந்தனர். இதைக் கண்ட காவலர்கள் அதிர்ச்சியுடன், அரசரிடமும், ஜெயதேவரிடமும் இச்செய்தியை சொல்ல, ஜெயதேவர் கண்ணீர் விட்டு ஸ்ரீஹரியை பலவாறு துதித்து தம்மை விரோதித்தவர்களை மன்னித்து, ஸ்ரீஹரி திருவடியில் சேர்த்துக் கொள்ளுமாறு பிராத்தித்தார்.
துஷ்டர்களையும், சத்ருக்களையும் ஸ்ரீஹரியின் பக்தர்களாகவே பார்க்கும் குணமுடைய ஜெயதேவரின் வேண்டுகோளை ஏற்று, ஸ்ரீஹரி அவருக்கு தரிசனம்தர, மன்னனும் அக்காட்சியைக் கண்டு, மனம் மகிழ்ந்து இறைவனை வணங்கினான். அந்தக்கணமே ஜெயதேவர் தாம் இழந்த கைகளும் கால்களும் திரும்ப வரப்பெற்றார். இதனைக் கண்ட அரசன், ஜெயதேவரின் துணைவியாரை பல்லக்கில் அழைத்து வருமாறு கட்டளை பிறப்பித்தான். அவ்வாறே ஜெயதேவரின் துணைவியார், பத்மாவதி அம்மையார் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டார். தம் கணவரின் புதிய நிலையினைக் கண்ட அவ்வம்மையார், ஆனந்த கண்ணீர் வடித்து, இறைவனை உளமார பிராத்தித்தார்.
அரசன் பத்மாவதி தேவியாரை உபசரித்து, கவனித்துக் கொள்ளுமாறு தம் அரசிகளுக்கு அறிவித்தார். அவர்களும் அவ்வாறே பத்மாவதி தேவியாருடன் அன்புடனும், மரியாதையுடனும் பழகி, ஸ்ரீகிருஷ்ண லீலைகளை கேட்டு மகிழ்ந்தனர்.
ஒரு நாள் அரசியாரின் சகோதரனின் மரணச் செய்தியும் அவருடன், அவர் மனைவி உடன் கட்டை எரியதாயும் செய்தி வந்தது. வேதனை அடைந்த அரசியாருக்கு, பத்மாவதி தேவியின் மௌனம் அதிசயமாக இருந்தது. அரசியாரின் சகோதரரின் மனைவி உடன்கட்டை ஏறியது, ஏழு பிறவியிலும், அவர்கள் தம்பதியாக இருப்பார்கள் என்று கருத்தல்லவா? என பத்மாவதியிடம் கேட்டார். அதற்கு, பத்மாவதி தேவி, கணவன் இறந்ததை கேட்ட உடனே மனைவி தற்கொலை செய்துகொள்ளலாமே தவிர, உரிருடன், நெருப்பில் விழுவதில், தனக்கு உடன்பாடில்லை என கூறினார். சூரியன் மறைத்தும், சூரிய கிரணங்கள் தானே மறைவது போலே மறைய வேண்டும் என்று கூறினார்.

அரசியாருக்கு, தேவியாரின் கூற்று பொய்மையாக மனதில் பட, சோதிக்க நினைத்தார். அன்று, அரசர் ஜெயதேவருடன் வேட்டையாட கானகம் சென்றார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, தன் மந்திரியுடன், ஜெயதேவர் காட்டில் புலி அடித்து இருதுவிட்டார், என்ற பொய் செய்தியை ஊரெங்கும் அறிவிக்கச் செய்தார். இச்செய்தி பத்மாவதி தேவியாரின் செவியில் விழ, உடனே அவர் மரணம் அடைந்தார். அதைக்கண்ட அரசியார் அதிர்ச்சி அடைந்தார்.
அரசன், அரண்மனை வந்ததும், இச்செய்தியால், அதிர்ச்சியும், வேதனையும் அடைந்து, பத்மவதியர் இருக்கும் இடம் சேர்ந்தார். மந்திரியார் மூலம், இந்த பொய்யான நாடகத்தை அறிந்த அரசன், அரசியாரை கொல்ல நினைத்தார். ஆனால், பெண்ணை கொள்வது பாவமாதலால், தன்னையே நெருப்பில் அஹுதி ஆக்க முற்பட்டார். நகரத்தின் வெளியே நெருப்பு மூட்ட கட்டளையிட்டு, ஜெயதேவரிடம் வந்து தன்னால் ஒருக் இழிவு ஏற்பட்டதாக கூறி தன் மனநிலையையும் கூறினார். நடந்ததை தன் ஞான திருஷ்டியால் அறிந்த ஜெயதேவர் அரசனை சமாதானப்படுத்தி, பத்மாவதி தேவியாரின் உடல் முன் வந்து ராதா-மாதவ கானம் பாடி, "மஆதவா கோவிந்தா பக்த ரத்ஷகா, கஜேந்டிரன்னுக்கு, த்ரௌபதிக்கும் உடனே அருள் புரிந்தவா, இப்போது, எனக்கு அருள் புரிவையாகே' என பலவாறு துதி செய்து தன்னை மறந்து 24 சுலோகங்களாக 8 வரி கொண்ட ஸ்லோகங்களை பாடப்பாட ஸ்ரீ ஜெகநாதன், தன் பக்தன்னுக்காக இறங்கி வந்து ஜெயதேவரை அணைத்து, ஆசீர்வதித்து பத்மவதிதேவியாரை உயிர்ப்பித்தார். மேலும் ஒரு வரமாக, "இந்த உன்னுடைய பாடல்களை பாடுபவராயும், கேட்பவரையும் இருபோர்க்கு எப்போதும் நான் அவர்கள் அருகில் இருப்பேன்.", ஏனக்கூறி மறைதார்.
அரசனின் பண்பும் பக்தியும், ஜெயதேவரின் அருளால் இருமுறை தெய்வ தரிசனம் அடயச் செய்தது அல்லவா!!!
வியாசரின் அவதாரமான ஜெயதேவரின் இந்த 24 கானங்கலான [ராசா லீலைகள்] கீத கோவிந்தந்தை பாடுவோரின் எல்லாவிதமான இன்னல்களும் ஸ்ரீஹரியின் அருளால் சூரியனைக்கண்ட பனிபோல் விலகி ஹரிபக்தர் ஆவர்கள் என்பது நிதர்சனம்.
ஜெய் ஜெயதேவ மகாராஜ்
ஜெய் ஸ்ரீஹரி
ஜெய் ஸ்ரீஹரி